உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு சான்றிதழ்; கலெக்டர் உத்தரவு

மாணவர்களுக்கு சான்றிதழ்; கலெக்டர் உத்தரவு

புதுச்சேரி : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதனையடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு எளிதாக சான்றிதழ் வழங்கு வதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங் கினார். தெற்கு சப் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோட்டாரு, வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் ௨ முடித்த மாணவர்கள் மேற்படிப்பிற்கு இருப்பிடம், ஜாதி சான்றிதழ் உரிய நேரத்தில் சிரமின்றி சான்றிதழ் வழங்க வேண்டும்.இதற்காக பிர்கா அளவில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.

எப்போது

சிறப்பு முகாம்கள் அடுத்த வாரம் முதல் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடக்கிறது. தனியார் பள்ளி மாணவர்கள் உள்பட சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட் டுள்ளது.சிறப்பு முகாம்கள் குறித்த அட்டவணை துணை கலெக்டர்கள் விரைவில் அறிவிக்க உள்ளனர்.இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை