உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு கடன் சங்க கட்டடம் முதல்வர் திறந்து வைப்பு

கூட்டுறவு கடன் சங்க கட்டடம் முதல்வர் திறந்து வைப்பு

புதுச்சேரி, : புதுச்சேரி, வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் நகரில், பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான மனையில், புதிய சங்க அலுவலக கட்டடதிறப்பு விழா நடந்தது. கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், சங்க தலைவர் தமிழொளி ஆகியோர் தலைமை தாங்கினர். முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் கலைவாணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா முன்னிலை வகித்தனர்.விழாவில் சங்க துணைத் தலைவர் ராஜசேகரன் வரவேற்றார். புதிய கட்டடத்தை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். சங்க இயக்குநர்கள் இளங்கோவன், மருதாஜலம், பிரபாகரன், கணேஷ், அருண்குமார், ஆறுமுகம், வசந்தராஜன், கோபி கிருஷ்ணன், வரதராஜலு, புஷ்ப சந்துரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சங்க செயலாளர் ஷியாம் சுந்தர் நன்றி கூறினார். சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை