| ADDED : ஜூன் 01, 2024 04:26 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் இன்று துவங்கும் குறும்பட திருவிழாவில், ஏராளமான சிறுவர்கள் பங்கேற்கின்றனர்.புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் ஆகியன சார்பில், இரண்டு நாள் சிறார் குறும்பட திருவிழா, அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங்கில், இன்று துவங்குகிறது. இதில், புதுச்சேரியைச் சார்ந்த 13 முதல் 18 வயதுள்ள சிறுவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை, இன்று காலை, 10:00 மணிக்கு அரசு செயலர் கேசவன் துவக்கி வைக்கிறார்.இதில், 30க்கும் மேற்பட்ட குறும்படங்கள், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி போன்ற மொழிகளில் சிறார்களுக்காக திரையிடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா நாளை நடக்கிறது. இந்த விழாவில், அரசு செயலர் ஆஷிஷ் மதவுராவ் நிறைவுரை ஆற்றுகிறார். நிகழ்ச்சியில் ஒவ்வொரு குறும்பட திரையிடலுக்கு முன்னரும் பின்னரும் சிறுவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிறுவர்கள் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.