மேலும் செய்திகள்
நாகமுத்துமாரியம்மன் கோவில் 2ம் ஆண்டு விழா
2 minutes ago
காஞ்சி மாமுனிவர் மைய இயக்குநர் பொறுப்பேற்பு
21-Feb-2026
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் 45அடி சாலை பாலாஜி நகர் மெயின் ரோட்டில், சேதமடைந்த சாலை மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்காலை உடனடியாக சீரமைக்க கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். புதுச்சேரி சாரம் 45அடி சாலை பாலாஜி நகர் மெயின் ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய சாலை வசதிகள் மற்றும் கழிவுநீர் செல்லும் பக்கவாட்டு வாய்க்கால் வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், அப்பகுதியில், செல்லும் மழைநீர் பாதாள வாய்க்காலை, பொதுப்பணித்துறை அனுமதியில்லாமல், தனி நபர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, உடைத்து, மின் ஒயர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால், அந்த வாய்க்கால் சேதமடைந்தது. இதனை கண்டித்தும், 10 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் சாலையை உடன் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 45 அடி சாலையில், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கோரிமோடு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
2 minutes ago
21-Feb-2026