உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளுனி பள்ளி ஆண்டு விழா

குளுனி பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி, : புதுச்சேரி புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக ஜிப்மர் இயக்குனர் ராக்கேஷ் அகர்வால், கவுரவ விருந்தினராக எஸ்.பி., கலைவாணன், குளுனி தென்கிழக்கு மாகாணத் தலைவி லொரைன் பின்டோ குளுனி, இல்லத் தலைவி செலின், பள்ளி முதல்வர் ரோசிலி, துணை முதல்வர் பான்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி, 5ம் வகுப்பு மாணவிகளின் 'செயற்கை நுண்ணறிவு மனித சமூகத்திற்கு நன்மை பயக்கிறதா, அல்லது தீமை பயக்கிறதா' என்ற பட்டிமன்றம் நடந்தது. இதே கருத்தை மையமாக கொண்டு பாடல்கள் மூலம் விளக்கப்பட்டது.பள்ளி 6,7ம் வகுப்பு மாணவர்களின் பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் தலைப்பிலான பட்டிமன்ற நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மாணவிகள் ராஜஸ்தான் பாரம்பரிய உடை அணிந்து கிராமிய நடனம் ஆடினர்.தொடர்ந்து பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்தாண்டு அரசு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஐக்கிய நாட்டு நிறுவனம் 2024ம் ஆண்டை சர்வதேச ஒட்டகங்களின் ஆண்டாக அறிவித்துள்ளதையொட்டி, இக்கருத்தை மையமாக வைத்து ஒவ்வொறு நிகழ்ச்சிகளும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவத் தலைவி சந்தியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ