உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் துவக்கி வைப்பு

போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: தேசிய மனநல திட்டம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்கள் வன்முறை, குற்றங்கள், பாலியல் நோய், உடல் நல கோளாறு, மன நோயால் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு பின்னடைவும், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. போதை பொருள் கடத்தல் மற்றும் ஒழிப்பை கருத்தில் கொண்டு கடந்த 1988ம் ஆண்டு முதல், ஜூன் 26ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.வழுதாவூர் சாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குலோத்துங்கன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தேசிய மனநல திட்ட அதிகாரி பாலன், மனநல மருத்துவர்கள் அரவிந்த், அருள்வர்மன் முன்னிலை வகித்தனர்.புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணி கதிர்காமம் மருத்துவ கல்லுாரியில் நிறைவு பெற்றது. பேரணியை தொடர்ந்து கதிர்காமம் மருத்துவ கல்லுாரி பயிலரங்கில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. ஏற்பாடுகளை தேசிய மனநல ஆலோசகர் ராஜா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை