மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
1 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
1 hour(s) ago
காட்டுமன்னார்கோவில் : விஷப்பூச்சி கடித்து கல்லுாரி மாணவர் இறந்தார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த அழகர்வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் விஷ்வா,20; காட்டுமன்னார்கோவில் அரசு கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, விஷ்வா, தனது வீட்டு தோட்டத்தில் கம்பி வேலி அமைத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரது காலில் விஷப்பூச்சி கடித்தது. அதில் மயக்கமடைந்து விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், விஷ்வா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்து அவரது தாய் சத்யா அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரது தந்தை வீராசாமியும் சில ஆண்டிற்கு முன் விஷப் பூச்சி கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago
1 hour(s) ago