உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணலிப்பட்டில் ஆணையர் ஆய்வு

மணலிப்பட்டில் ஆணையர் ஆய்வு

திருக்கனுார்: மணலிப்பட்டு காலனியில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு காலனியில் அடிப்படை தேவைகளான எரி கொட்டகை, கரும காரிய கொட்டகை, குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய போர்வெல் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, அமைச்சர் உத்தரவின் பேரில், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது, அரசு குடியிருப்பு அருகே கரும காரிய கொட்டகை அமைக்கவும், ஆற்றங்கரை ஓரம் எரி கொட்டகை அமைக்கவும் இடங்களை பார்வையிட்டனர். ஆய்வின்போது உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை