உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனியில் ரூ.5 லட்சம் கம்ப்யூட்டர் திருட்டு

தனியார் கம்பெனியில் ரூ.5 லட்சம் கம்ப்யூட்டர் திருட்டு

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் தனியார் கம்பெனியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கம்ப்யூட்டர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம்-பாகூர் சாலையில் மேனடெக் தனியார் கம்பெனி உள்ளது. இக்கம்பெனியில் லேப்டாப், கம்ப்யூட்டர் தாயரிக்கப்படுகிறது. இந்த கம்பெனியில் நேற்று முன்தினம் இரவு 10.௦௦ மணியளவில் கம்பெனி பின்புறம் வழியாக மர்ம நபர்கள் நுழைந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 10 கம்ப்யூட்டர், 5 மானிட்டர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து கம்பெனி சீனியர் மேலாளர் அய்யப்பன் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் இளமுருகன் தலைமையிலான போலீசார் கம்பெனிக்கு விரைந்து சென்று அங்குள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் இரண்டு வாலிபர்கள் கம்பெனி பின்புறம் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து கம்ப்யூட்டர்களை திருடிச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ