உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடன் பெற்று கொடுத்தாலும் ஒப்பந்தாரர்கள் சாலை பணிகளை முடிப்பது இல்லை: சிவசங்கரன்

கடன் பெற்று கொடுத்தாலும் ஒப்பந்தாரர்கள் சாலை பணிகளை முடிப்பது இல்லை: சிவசங்கரன்

புதுச்சேரி: கடன் பெற்று கொடுத்தாலும் சாலை பணிகளை ஒப்பந்தாரர்கள் முடிப்பது இல்லை என சிவசங்கரன் எம்.எல்.ஏ., வேதனை தெரிவித்தார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அவர் பேசியதாவது:புதுச்சேரியில் இருந்து பாகூர், நெட்டபாக்கம், கரையாம்புத்துார், திருக்கனுார் பகுதிக்கு செல்லும் சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்றினால், அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கியபோது, அரசு துாரிதமாக செயல்பட்டு மருத்துவ குழு, பேரிடர் மீட்பு உடனடியாக அமைத்து மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த நிவாரண தொகை இதுவரை வந்து சேரவில்லை.சாலை அமைக்க சிட்பியில் ஒராண்டிற்கு முன்பு கடன் பெற்று கொடுத்தும், சாலை பணியை ஒப்பந்தாரர்கள் முடிக்கவில்லை. ரெட்டியார்பாளையம் புது நகரில் விஷவாயு வராதபடி அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும், கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் தினசரி அச்சத்தில் உள்ளனர். சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.மின் மாற்றிகள் தயாராக இருந்தும் அதை நிறுவதிற்கு ரூ. 3 லட்சம் வரை செலவாகும். அதற்கான நிதி மின்துறையில் இல்லை என கூறி மின் மாற்றிகள் அமைக்காமல் உள்ளனர். அதுபோல் தொகுதி முழுதும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ