உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

திருக்கனுார், : திருக்கனுார் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. திருக்கனுார் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் 6 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் துவங்கி இரண்டு நாள் நடந்தது. தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில், திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 30 அணிகள் கலந்து கொண்டன. இதில், முதல் பரிசை மணவெளி அணியும், இரண்டாம் பரிசை திருக்கனுார் அணியும், மூன்றாம் பரிசை வம்புப்பட்டு அணியும் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் ராணுவ வீரர் நாராயணசாமி பரிசுகள் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கணபதி, சுரேஷ்குமார், முரளிதரன், சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை