உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு தாளாளர் பாராட்டு

பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு தாளாளர் பாராட்டு

புதுச்சேரி: புதுச்சேரி, பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வில், மாணவர் ஜோலி லோகித்குமார் 457 மதிப்பெண், 10ம் வகுப்பில் மாணவர் பவித்ரன், 379 மதிப்பெண் பெற்றனர். அவர்களை பள்ளி தாளாளர் புவனா, பாராட்டினார்.அவர் கூறுகையில், 'இப்பள்ளியில், படிப்பில் சராசரி மாணவர்கள், படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில், தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இம்மாதிரியான மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வாழ்க்கைக்கு தேவையான திறன்கள், ஆளுமை வளர்திறனுடன் கூடிய வேலைவாய்ப்பு, கல்வி திட்டத்தின் மூலமாக பயனடைய செய்கிறோம்.மாணவர்களுக்கு தங்கள் தனித்துவமான தேவை களை பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட ஆதரவுகள், மாற்றமான கற்றல் முறைகள் மற்றும் மன சிதறலுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.தங்கள் பிள்ளைகளின் மேல் பெற்றோர்களின் அங்கலாய்ப்பு, கனவுகள், எதிர்பார்ப்புகள் நிறைவடைய செய்யும் வகையில் மாணவர்களுக்கு, வழிகாட்டி பள்ளியாக எங்கள் பள்ளி செயல்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்