உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் விடுதி அறையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்

தனியார் விடுதி அறையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்

புதுச்சேரி: புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸ் அறையில் துாக்கு மாட்டிய அழுகிய நிலையில் இருந்த வாலிபர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆராத்திவேலுார், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் விஜயக்குமார், 30; திருமணம் ஆகாதவர். கடந்த 14ம் தேதி புதுச்சேரி வந்த விஜயக்குமார், உருளையன்பேட்டை அய்யனார் கோவில் வீதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். ஒரு நாள் மட்டுமே தங்குவதாக கூறியவர் நேற்று வரை அறையை காலி செய்யவில்லை.சந்தேமடைந்த கெஸ்ட் ஹவுஸ் நிர்வாகம், அறையில் உள்ள விஜயக்குமாரை அழைத்து வர ரூம் பாய் குமாரை அனுப்பினர். 3வது மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை. பூட்டப்படாமல் உள்ள அறையின் கதவை திறந்து பார்த்தபோது, விஜயக்குமார் மின் விசிறியில் துாக்கில் தொங்கியது தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடனடியாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப் பதிந்து விஜயக்குமார் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்