உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வி.வி.பாட் இயந்திர பதிவு சரிபார்ப்பால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்

வி.வி.பாட் இயந்திர பதிவு சரிபார்ப்பால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்

புதுச்சேரி: வி.வி.பாட் இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணி சரிபார்க்கப்பட்டதால், ஓட்டு எண்ணிக்கை தாமதம் ஆனது.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டது. புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒட்டுகள் எண்ணிக்கை முடித்ததும், 5 வி.வி.பாட் இயந்திரத்தில் பதிவான சீட்டுகள், ஓட்டு பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.இதனால் ஒவ்வொரு தொகுதி ஓட்டு எண்ணிக்கை முடிந்து, சரிபார்ப்பு பணியால் 1 மணி நேரத்திற்கு மேலாக முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டது. ஒரு ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 3 தொகுதி விதம், லாஸ்பேட்டையில் மட்டும் 8 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.காலை 8:00 ஓட்டு எண்ணிக்கை துவங்கி இரவு 9:45 மணியை தாண்டி சென்றது. ஓட்டு எண்ணிக்கை முடிந்தாலும், அதனை சரிபார்க்கும் பணியாலும் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை