உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத நிதி ஒதுக்க கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத நிதி ஒதுக்க கோரிக்கை

புதுச்சேரி : பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என, புதுச்சேரி அனைத்து மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.இதுகுறித்து மாநில தலைவர் கார்த்திக்கேயன் முதல்வரிடம் அளித்துள்ள மனு; பட்ஐெட் கூட்டத்தொடரின் மொத்த நிதியில் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காக 5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உயர்த்துவதாக அறிவித்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை என, அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 15 கிலோ அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ