| ADDED : ஆக 07, 2024 05:40 AM
புதுச்சேரி : வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் ஆத்துவாய்கால்பேட் பகுதியில் நடந்தது.சுகாதார ஆய்வாளர் மதிவதனன் தலைமை தாங்கினார். சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். களப்பணியாளர்கள் அன்பரசன், கோவேந்தன், திருக்குமரன், லோகேஸ்வரன் மற்றும் ஆஷா பணியாளர்கள் காமாட்சி, ஷர்மிளா பானு, தேஜா, அம்சா, தமிழ், குணசுந்தரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு ஒழிப்பு களப்பணி மேற்கொண்டனர். வீடுகளில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர், பானை, உரல், தேங்காய் குடுவை கண்டறிந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பொது மக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.