உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயிற்சி டாக்டர்களுக்கு உதவித்தொகை மறுப்பு  மருத்துவ கல்லுாரிகளுக்கு சுகாதார துறை கிடுக்கிபிடி

பயிற்சி டாக்டர்களுக்கு உதவித்தொகை மறுப்பு  மருத்துவ கல்லுாரிகளுக்கு சுகாதார துறை கிடுக்கிபிடி

புதுச்சேரி: பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை விபரங்களை கேட்டு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.பி.பி.எஸ்., பயிலும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக மருத்துவமனையில் பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் செய்கின்றனர். இதற்காக, தேசிய மருத்துவ கவுன்சில் அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.முதுநிலை மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு முதலாமாண்டில் -43,000 ரூபாய், இரண்டாம் ஆண்டில் 45,000, மூன்றாம் ஆண்டில் 47,000 ரூபாய் மாதந்தோறும் வழங்க வேண்டும். யூ.ஜி., மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகள் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை சரிவர வழங்கவில்லை. இது தொடர்பான தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் சென்ற நிலையில் சுகாதார துறைய அதிரடியாக இறங்கியுள்ளது. அனைத்து தனியார் மருத்துவ கல்லுாரிகளும் பயிற்சி டாக்டர்களுக்கான உதவித் தொகை வழங்குவதை இனி உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கை காலாண்டிற்கு ஒரு முறை சுகாதார துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சி டாக்டர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் உதவித் தொகை பரிமாற்றம் செய்ய வேண்டும். இதில் தவறுகள் இருப்பது தெரிய வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அத்துடன் பயிற்சி டாக்டர்கள் உதவித் தொகை வழங்குவது தொடர்பாக துல்லியமான ஆவணங்களை பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை