உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

நெட்டப்பாக்கம்: மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 31ம் தேதி அர்ஜூனன் - திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீமிதி திருவிழா நடந்தது.மடுகரை பகுதியைச் சேர்ந்த நுாற்றுாக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு உள்பட ஏரளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் தனபூபதி மற்றும் மடுகரை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ