உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெத்தி செமினார் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழ் வழங்கல்

பெத்தி செமினார் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழ் வழங்கல்

புதுச்சேரி: பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழ் வழங்கும் பணியை பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் துவக்கி வைத்தார்.கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாணவர்களின் கல்விக்கும், விளையாட்டுக்கும், அறிவுக்கும் அணி சேர்த்து வரும் தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ், நேற்று முன்தினம் முதல் பள்ளிகளில் வழங்கப்பட்டது.பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கி, பொது அறிவு வாசிப்பினை துவக்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பட்டம் இதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் கூறுகையில், 'தினமலர் பட்டம் இதழில் பொது அறிவு மற்றும் பாடத்தை சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு எளிய முறையில் புரியும் படி எடுத்துரைக்கப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அதில் ஆர்வம் காட்டுகின்றனர். அரிய செய்திகளை படங்களுடன் எடுத்துரைப்பதால் பள்ளி மாணவர்களை கவர்ந்து விடுகிறது. பட்டம் இதழ் படிப்பது போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளவும் உதவும். பள்ளிப் பாடங்களிலும் சரி, பாடத் திட்டத்துக்கு வெளியே உள்ள பொது விஷயங்களிலும் சரி, அவர்களுக்கு போதிய வாசிப்பு அவசியம். மாணவர்களின் அறிவு தேடலுக்கு ஏற்ற தோழனாக பட்டம் இதழ் உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை