உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க., காங்., வெளிநடப்பு

புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க., காங்., வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், 50 சதவீத அரசு ஒதுக்கீடு பெறாததால், சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று, 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித்தலைவர் சிவா குறுக்கிட்டு பேசுகையில், 'தனியார் மருத்துவக் கல்லுாரிகள், 50 சதவீத இடங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும்' என தேசிய மருத்துவுக் கவுன்சில் கூறியுள்ளது. இது புதுச்சேரியில் பின்பற்றப்படாததால், மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காலம் காலமாக பஞ்சாயத்து பேசி நாம் வாங்குவது போல் அல்லாமல் சட்டமாக்க வேண்டும்' என்றார். இதைத் தொடர்ந்து தி.மு.க மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.இந்தாண்டில் இருந்து, 50 சதவீத மருத்துவ இடங்களை பெற வலியுறுத்தியும், அரசின் மீது நம்பிக்கை இல்லாததாலும், சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், தி.மு.க., மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.இதையடுத்து சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன் மற்றும் நேரு ஆகியோரும் இந்த விவகாரத்தில், தே.ஜ., கூட்டணி அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் அமளி, கூச்சல், குழப்பம் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ