மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
3 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
3 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
3 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்., கட்சியுடன் 'கை' கோர்த்து தி.மு.க.,வினர் தீவிர களப்பணியாற்றியதால், காங்., வேட்பாளரின் அபார வெற்றி சாத்தியமாகி உள்ளது.புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தைவிட 1 லட்சத்து 36 ஆயிரத்து 516 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வைத்திலிங்கத்தின் அபார வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கூட்டணி கட்சியான தி.மு.க., முக்கிய காரணமாக திகழ்கிறது.பிரதான எதிர்கட்சியாக திகழும் தி.மு.க.,வுக்கு புதுச்சேரியில் 4 எம்.எல்.ஏ.,க்கள், காரைக்காலில் 2 எம்.எல்.ஏ.,க்கள் என மொத்தம் 6 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மாநில அளவில் மட்டுமல்லாமல், தொகுதி மட்டத்திலும், கிளை மட்டத்திலும் நிர்வாகிகளை நியமித்து வலுவான கட்சி கட்டமைப்பை தி.மு.க., வைத்துள்ளது.எனவே, பூத் அளவிலும் காங்., நிர்வாகிகளுடன் கைகோர்த்து தி.மு.க., நிர்வாகிகள் களப் பணியாற்றினர். ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும் தேர்தலில் தீவிரமாக பணியாற்றினர்.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, காங்., கட்சிக்கு உறுதுணையாக இருந்து தேர்தல் பணியாற்றுமாறு தி.மு.க., தலைமை அறிவுறுத்தி இருந்தது. இதனால், மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல், தங்களது சொந்த பணத்தை செலவிட்டு தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பலர் வேலை செய்தனர்.இதன் எதிரொலியாக, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் 6 தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளரைவிட கூடுதலான ஓட்டுகளை காங்., வேட்பாளருக்கு பெற்று தந்துள்ளனர். தி.மு.க., வசமுள்ள தொகுதிகளில் மட்டும் 93 ஆயிரத்து 185 ஓட்டுகள் காங்., வேட்பாளருக்கு கிடைத்துள்ளது.குறிப்பாக, திமு.க., அமைப்பாளர் சிவா தனது வில்லியனுார் தொகுதியில் மட்டும் 22 ஆயிரத்து 846 ஓட்டுகளை பெற்று தந்துள்ளார். இது, கடந்த சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட்டபோது பெற்ற 19 ஆயிரத்து 653 ஓட்டுகளைவிட அதிகமாகும். இந்த தொகுதியில் மட்டும் 12 ஆயிரத்து 529 ஓட்டுகள் காங்., வேட்பாளருக்கு கூடுதலாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago