உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரையில் சுற்றுலா பயணியை கடித்து குதறிய நாய் 

கடற்கரையில் சுற்றுலா பயணியை கடித்து குதறிய நாய் 

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணியை துரத்தி துரத்தி கடித்த வெறிநாயை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சேரி கடற்கரையில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகிறது. இந்த நாய்கள் கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை துரத்தி சென்று மிரட்டுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை கடற்கரை வந்த சுற்றுலா பயணி ஒருவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்து குதறியது.அருகில் இருந்த பொதுமக்கள் நாயை விரட்டி விட்டு காயம்பட்ட சுற்றுலா பயணியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடற்கரையில் வெறி பிடித்து கடிக்கும் தெரு நாயை பிடித்து அப்புறப் படுத்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை