உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார்சலில் தவறான  பொருட்கள் என மிரட்டுபவர்களிடம்  ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

பார்சலில் தவறான  பொருட்கள் என மிரட்டுபவர்களிடம்  ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி, : தவறான பொருட்கள் பார்சலில் இருப்பதாக கூறி மிரட்டும் தனியார் கூரியர் சர்வீஸ் செய்பவர்களிடம் பணத்தை அனுப்பி ஏமார வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.புதுச்சேரியில் பல்வேறு வகைகளில் ஆன்லைன் மூலம் தினமும் லட்ச கணக்கில் மோசடி செய்யும் சம்பவம் நடந்து வருகிறது. பெடல் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தை தவறான முறையில் பயன்படுத்தி, இந்த கூரியர் சர்வீஸ்சில் இருந்து பேசுவதாக, கூறி, பார்சல் வந்துள்ளதாக கூறுகின்றனர். அதில், தவறான பொருட்கள் இருப்பதாகவும், இதுகுறித்து, மொபைல் போன் மூலம் போலியான, சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., மும்பை போலீஸ் என மொபைல் போனில் பேசுங்கள் என கூறு மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.இந்த கூரியர் மூலம் போலியாக பேசுவர்களை நம்பி பணத்தை அனுப்பி ஏமார வேண்டாம். அப்படி பேசுவர்கள் மொபைல் எண்ணை வாங்கி சைபர் கிரைம் போலீசாருக்கு தகவலை தெரிவிக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ