உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிரைவர் தற்கொலை: போலீசார் விசாரணை

டிரைவர் தற்கொலை: போலீசார் விசாரணை

பாகூர் : டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர் மாரி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் 37; டிரைவர். இவர் கடலுாரில் டிராக்டரில் தண்ணீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமுதா, 37. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பார்த்திபன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.வயிற்று வலி காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன், டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை கன்னியக்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் நுழைவு வாயில் அருகே உள்ள மரத்தில் பார்த்திபன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்திபன் உடலை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது மனைவி அமுதா அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ