மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி: தற்காலிக பஸ் ஸ்டாண்டில் புழுதி பறப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட் ஏ.எப்.டி., திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.24 மணி நேரமும் பிசியாக இருக்கும் ஏ.எப்.டி., பஸ் ஸ்டாண்டில் செம்மண் புழுதி பறக்கின்றது. அப்பகுதி முழுவதும் புழுதி பறந்து வீடுகளையும் சூழ்கிறது. கடைகளிலும் புழுதி படிகிறது.இதனை கண்டித்து ஆட்டுபட்டி மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் திடீரென பஸ் ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் மனித சங்கிலியாக நின்று புழுதி பறப்பதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்து வந்த உருளையன்பேட்டை போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். புதுச்சேரி நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தை விலக்கி கொண்டனர். இதனால் மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago