உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமூக சேவகருக்கு ஏக்தா விருது

சமூக சேவகருக்கு ஏக்தா விருது

புதுச்சேரி : சமூக சேவகர் ஆதவன் 'ஏக்தா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒடிசா மாநிலம், பான்பூரில் உள்ள கிருத்தி பாஷா பவனில், சர்வதேச பழங்குடியினர் இளைஞர் கலை விழா வரும் ஜூன் 8ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது.இந்த விழாவில் 26 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், அவரவர் நாட்டின், மாநில கலாசார, நடன இசை பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக போட்டியில் கலந்து கொள்கின்றனர்.விழாவில் புதுச்சேரியை சேர்ந்த சமூக சேவகர் ஆதவனுக்கு, தேசிய அளவில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஏக்தா விருது வழங்கப்படுகிறது.தேசிய அளவில், 11வது முறையாக, புதுச்சேரி மாநிலத்திலிருந்து விருதுக்காக ஆதவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை