மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள பாலாஜி மேல்நிலைப்பள்ளி சார்பில் 161 மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவிகள் ஹலிமா மற்றும் ஹரிப்பிரியா ஆகியோர் 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி ஓவியா 582 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவி கீர்த்தனா 575 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.இப்பள்ளியில் 28 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 500க்கு மேல் 28 மாணவர்களும், 450க்கு மேல் 123 மாணவர்களும், 400க்கு மேல் 144 மாணவர்களும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பள்ளியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் பாடத்தில் ஏழு மாணவர்களும், கம்ப்யூட்டர் அப்பிலிகேஷன் பாடத்தில் நான்கு மாணவர்களும், கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் தலா இரு மாணவர்கள் மற்றும் வணிக கணக்கு பாடத்தில் ஒருவர் என மொத்தம் 16 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இது குறித்து பள்ளி நிர்வாகி கூறியதாவது: கிராம பகுதியில் எங்கள் பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கு மாணவர்களுக்கு இலவச கோச்சிங் வழங்கப்படுகிறது. 100 சதவீகித தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago