உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுச்சூழல் வீதி நாடக போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை

சுற்றுச்சூழல் வீதி நாடக போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை

புதுச்சேரி: நில மறுநீரமைப்பு மற்றும் நிலத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் வீதி நாடக விழிப்புணர்வு போட்டியில், பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில், தேசிய அளவிலான வீதி நாடகப் விழிப்புணர்வு போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில், ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதில், மாணவர்கள், விஷ்ணுகுமரன், சியாம்குமார்,செயிண்ட்பால், ரம்யா,வெங்கட்ராகவ், டேனியா கேத்ரின், சபிதா ஆகியோர் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ் பள்ளி முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை