உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு திடல் அபகரிப்பு? போலீஸ் நிலையம் முற்றுகை

விளையாட்டு திடல் அபகரிப்பு? போலீஸ் நிலையம் முற்றுகை

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் விளையாட்டு திடலை மனைகளாக மாற்றும் முயற்சியை கண்டித்து, விளையாட்டு வீரர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசு இடத்தில், சுற்றுப்புற கிராம இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த இடத்தை, கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் சார்பில், மனைகளாக மாற்றிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அந்த இடத்தில், மனைகளுக்கான எல்லை கற்களை அமைக்க அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். அப்பகுதி விளையாட்டு வீரர் கள் மற்றும் பொது மக்கள் பணியை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் மற்றும் போலீசார் சமாதானம் செய்ததையடுத்து, கலைந்து சென்றனர். விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்கள், விளையாட்டு திடலை அபகரிக்கும் முயற்சி நடப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி, விளையாட்டு திடலை மீட்டு தரக்கோரி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்