உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிகிச்சைக்கு வந்த விவசாயி மாயம்

சிகிச்சைக்கு வந்த விவசாயி மாயம்

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயி மாயமானதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி, 47; விவசாயி. இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக, மனைவி முத்துலட்சுமியுடன் கடந்த 12ம் தேதி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தார்.மருத்துவர்கள், பரிசோதனை டெஸ்ட் எடுக்க வரவேண்டும் என கூறினர். அதனால் அன்று இரவு மருத்துவமனை வளாகத்தில் மனைவியுடன் தங்கிருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, வீரமணி காணவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த, அவரது மனைவி, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ