உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் அருகே புறவழிச்சாலையில் மேம்பாலம்: அதிகாரிகள் ஆய்வு

பாகூர் அருகே புறவழிச்சாலையில் மேம்பாலம்: அதிகாரிகள் ஆய்வு

பாகூர் : பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையில், பாகூர் - பிள்ளையார்குப்பம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இந்த சாலையால், கிராமங்களை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டு வருகிறது. குறிப்பாக, பாகூரில் இருந்து பின்னாட்சிக்குப்பம், சார்காசிமேடு வழியாக பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையின் குறுக்கே புறவழிச்சாலை குறுக்கிடுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.இந்த இணைப்பு சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுருத்தி கடந்த 1ம் தேதி அப்பகுதி மக்கள், லாரிகளை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் நகாய் அதிகாரிகள், பாகூர்- பிள்ளையார்குப்பம் சாலை பின்னாச்சிகுப்பம் பைபாஸ் சாலை சந்திப்பில் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள், இந்த சாலை மூடப்பட்டால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலைமை ஏற்படும். இங்கு ரவுண்டானா, அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து தலைமை பொறியாளர் தீனதயாளன், நகாய் திட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அதற்கு, அவர்கள், இங்கு ரவுண்டான அமைத்தால் அதிக விபத்து ஏற்பட கூடும். இப்பகுதியில் ரவுண்டான அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றனர். தலைமை பொறியாளர் தீனதயாளன் பொது மக்களிடம் பேசுகையில், 'இந்த இடத்தில் மேம்பாலம் அமைத்தால் தான் விபத்துக்களை தடுக்க முடியும். இது தொடர்பாக, பொது மக்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அதனை தொடர்ந்து, சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று சந்திப்பு பகுதியில், புறவழிச்சாலை கடந்து சுடுகாட்டிற்கு செல்லும் வகையில், சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்திவிட்டு புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை