| ADDED : ஜூன் 30, 2024 05:18 AM
புதுச்சேரி : 'விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:முதல்வர் ரங்கசாமி தேர்தல் அறிக்கையில், ரேஷன் கடைகளை திறந்து,உணவுப்பொருட்கள் வழங்குவதாக சொன்னார்.ஆனால், இதுவரை ரேஷன் கடைகளை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சந்தனக்கட்டை கடத்தல் விவகாரத்தில் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. சந்தன எண்ணெய் எடுக்கும் நிறுவனம், பல ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில், வனத்துறை அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது.அமைச்சருக்கு தெரியாமல் இந்த தொழிற்சாலை இயங்கி இருக்க முடியாது. இதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். தனது அமைச்சர் பதவியை ஜெயக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரியில் விதிகளை மீறி கட்டப்பட்ட பல கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, ரூ.30 கோடி வரை, லஞ்சம் பெறப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையில், 30 சதவீத கமிஷன் விளையாடுகிறது. முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் புரோக்கர்கள் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை. புரோக்கர்கள் தான், இந்த ஆட்சியை நடத்துகின்றனர்.அமைச்சர் நமச்சிவாயம், சமீபத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். அவர் ஏற்கனவே, துபாய் - 11 முறை ; சிங்கப்பூர் - 9 முறை ; மலேசியா - 7முறை; சென்று வந்துள்ளார். தன்னுடைய துறை வேலைகளை பார்க்காமல், அவர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார். அவர் வெளிநாடுகளுக்கு செல்ல, உள்துறை அமைச்சகத்திடமும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும் பல தடவை அனுமதி பெறவில்லை' என்றார்.