உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாதாள சாக்கடையை சீரமைக்க மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை

பாதாள சாக்கடையை சீரமைக்க மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் பாதாள சாக்கடைகளை சரி செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் கோரிக்கை விடுத்துள்ளாார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் அவர் அளித்த மனு:முத்தியால்பேட்டையில் கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. இன்றைய நகர வளர்ச்சியில் புதிய குடியிருப்பு பகுதிகள் உருவாகி உள்ளன. இந்த வளர்ச்சிக்கேற்ப, பாதாள சாக்கடைகள், மாற்றி அமைக்கப்படவில்லை. மேலும், பல்வேறு பகுதிகளில் உடைந்தும், பல இடங்களில் அடைப்புகளும் ஏற்பட்டுபாதாள சாக்கடை தொட்டிகள் நிரம்பி வழிந்து கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால், முத்தியால்பேட்டை பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை .ரெட்டியார்பாளையம் சம்பவம் போல் முத்தி யால்பேட்டை பகுதியிலும், நடந்து விடுமோ என்ற அச்சம், இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இதுபோன்ற அசம்பாவிதம் நடப்பதற்கு முன் முத்தியால்பேட்டை பகுதி முழுவதும் துார் வாரி, அடைப்புகளை நீக்கி, சேதமடைந்த பகுதிகளை சரி செய்து, மக்களை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும்.அவர்களின் அச்சத்தை உடனடியாக போக்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை