உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உளுந்துார்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்துார்பேட்டை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்துார்பேட்டை, : பக்ரீத் பண்டிகையையொட்டி, உளுந்துார்பேட்டையில் நேற்று நடந்த வாரச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் புதன்கிழமை தோறும் ஆட்டு வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி, நேற்று நடந்த வாரச் சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர்.ஆடுகளின் தேவை அதிகமாக இருந்ததால், விலை உயர்ந்து, ஒரு ஆடு ரூ.3,000 முதல் 30 ஆயிரம் வரை விலைபோனது. கூடுதல் விலை கிடைத்ததால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றைய சந்தையில் ரூ.2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை