மேலும் செய்திகள்
வீரமங்கை தற்காப்பு கலை சாகச விழிப்புணர்வு
12 hour(s) ago
தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி
12 hour(s) ago
ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்
12 hour(s) ago
பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
12 hour(s) ago
புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லுாரியில் 19வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குநர் செந்தில் வரவேற்றார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், தட்சசீலா பல்கலை இணைவேந்தர் நிலா பிரியதர்ஷனி முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் ராஜப்பன் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக டி.ஆர்.டி.எஸ்., மூத்த விஞ்ஞானி டில்லிபாபு விஜயகுமார், சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.விழாவில், அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் உட்பட 17 மாணவ, மாணவியர்களுக்கு கல்லுாரி சார்பில் தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.876 இளநிலை மாணவர்களுக்கும், 252 முதுநிலை மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago