உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா

சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி : கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று காலை கலச பிரதிஷ்டை நடந்தது. அதைத் தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடந்தது.மாலை 4:00 மணிக்கு, குரு பவானுக்கு, பால், தயிர், நெய், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிேஷகம் நடந்தது. குரு பவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியான மாலை 5:19 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள், கோவில் குருக்கள் தேவசேனாபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ