உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

அரியாங்குப்பம் : மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.அரியாங்குப்பம் ஆர்.கே., நகரை சேர்ந்தவர் வினோத்ராஜ், 29. இவர் தொடர்ந்து மது குடித்து வந்ததால், மனைவி மஞ்சுளா தட்டி கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மஞ்சுளா கோபித்துக் கொண்டு, தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.வினோத்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிந்து, மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
ஜூலை 24, 2024 09:56

தினந்தோறும், இது மாதிரி எத்தனை குடும்பங்கள் சீரழிஞ்சாலும் , இப்போதைய அரசு, கவலை பட போவதில்லை, தமிழ் நாட்டில் மது விற்பனையை குறைக்க போவதுமில்லை. நாம்தானே தெரிந்தே தேர்ந்தெடுத்திருக்கிறோம். அனுபவிக்க வேண்டியதுதான்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை