| ADDED : மே 02, 2024 06:23 AM
புதுச்சேரி: பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் 2024-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, ஓட்டல் செண்பகா ரெசிடன்சில் நடந்தது.விழாவிற்கு, முன்னாள் தலைவர் அஜித்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ராமலிங்கம் எம்.எல்.ஏ., விழுப்புரம் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி சேர்மன் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னாள் தலைமை பொறியாளர் சுவாமிநாதன், 2024-25ம் ஆண்டிற்கான புதிய தலைவராக சுரேஷ், செயலாளராக ராம்குமார், பொருளாளராக பாஸ்கர், மற்றும் துணை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.விழாவில், முன்னாள் தலைவர்கள் பிரதாபன், தங்கமணிமாறன், சிவகாந்தன், மகாலிங்கம், அண்ணாமலை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து கட்டிட சங்க பொறுப்பாளர்கள், பொறியாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செயலாளர் பாஸ்கரன் 2023-2024ம் ஆண்டிற்கான அறிக்கை சமர்ப்பித்தார்.ஏற்பாடுகளை தலைவர் சுரேஷ், செயலாளர் ராம்குமார், பொருளாளர் பாஸ்கர் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.