உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட போலீஸ் உடற்பயிற்சி கூடம் திறப்பு

ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட போலீஸ் உடற்பயிற்சி கூடம் திறப்பு

புதுச்சேரி: கோரிமேடு போலீஸ் மைதானத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட போலீஸ் நவீன உடற்பயிற்சி கூடத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானம் அருகே, போலீஸ் அதிகாரிகள் உடற்பயிற்சி மேற்கொள்ள கடந்த 2 ஆண்டிற்கு முன்பு உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. இதில் உடற்பயிற்சி மேற்கொள்ள ரூ. 1 கோடி மதிப்பிலான 50 வகையான நவீன உடற்பயிற்சி இயந்திரங்கள் பொருத்தப்பட்டது. பெண்களுக்கு தனி பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. யோகா, சூம்பா நடன உடற்பயிற்சிகளுக்கான உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறோடா ஆறுமுகம், டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, எஸ்.பி.,க்கள் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய உடற்பயிற்சி கூடத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கூட மாத கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்