உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருமாம்பாக்கம் பள்ளியில் அறிவியல் பூங்கா திறப்பு

கிருமாம்பாக்கம் பள்ளியில் அறிவியல் பூங்கா திறப்பு

பாகூர், : கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் பூங்கா மற்றும் கணித ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் கருணாகரன் வரவேற்றார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., அறிவியல், கணிதம் ஆய்வகங்களை திறந்து வைத்து, மாணவர்களுக்கு பாட புத்தகம், சீருடை மற்றும் தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார்.தமிழ்நாடு தொலை தொடர்பு கணக்கு நிதி நிர்வாக அறங்காவலர் சாந்தகுமார்,உறுப்பினர்கள் சித்ரா, நாகராஜன் ஆகியோர் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி, பாராட்டினர்.பிளஸ் 2 தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி விரிவுரையாளர் புனிதா, பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மாலதி பரிசு வழங்கி பாராட்டினார்.தொடர்ந்து, மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகளை துாண்டும் வகையில், இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பூங்கா,மூலிகையின் அவசியம் குறித்து அறிந்து கொள்ள மூலிகை பூங்கா, இயற்கணிதம் முதல் வடிவியல் வரைவிலான கணித சூத்தரங்கள் உடன் கூடிய உபகரணங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கணித ஆய்வகம் , செயற்கை நீரூற்று மற்றும் மீன் காட்சியகம், சமுக அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். பொறுப்பாசிரியர் பழனியப்பன், தலைமையாசிரியர் சத்தியவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை