மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி, : இ.சி.ஆரில் சாலையில் அதிகரிக்கும் விபத்துகளை குறைக்க தடுப்பு கட்டைகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.காலாப்பட்டு இ.சி.ஆரில் சாலை விபத்துகளை குறைக்க சாலையின் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய இடைவெளியுடன் திட்டு திட்டாக அமைக்கப்பட்ட இந்த தடுப்பு கட்டைகளால் விபத்துகள் அதிகரித்தன. குறிப்பாக இரவில் சென்டர் மீடியன் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தொடர் விபத்தில் சிக்கினர்.இதனையடுத்து இடைவெளிவிடப்பட்ட இடங்களில் அரை அடி தடுப்பு கட்டைகள் கற்கள் வைத்து சமாளிக்கப்பட்டது. தற்போது இ.சி.ஆரில் பேட்ஜ் ஒர்க்குடன் புதிதாக சாலை போடப்பட்டுள்ள சூழ்நிலையில் பல இடங்களில் அரை அடி தடுப்பு கட்டைகள் உயரம் குறைந்துவிட்டது.சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் மீண்டும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலை சமமாக உள்ள தடுப்பு கட்டைகளில் வாகனங்கள் ஏறி இறங்கி விபத்தில் சிக்குகின்றன. 3 அடி உயர சென்டர் மீடியனும், அரை அடி உயர தடுப்பு கட்டை கற்களும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் கற்கள் சிதறி உருக்குலைந்து காணப்படுகின்றன.வாகன ஓட்டிகள் கூறுகையில், 'சிறிய உயரத்துடன் தடுப்பு கட்டைகள் இருப்பது இரவில் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியவில்லை. சிறிது கவனம் சிதறினாலும், தடுப்பு கட்டையில் உரசி விபத்துகள் நடக்கின்றன. எனவே சாலையில் புதைந்துள்ள அரை அடி தடுப்பு கட்டையை முற்றிலும் அகற்றிவிட்டு, 3 அடி உயரத்திற்கு சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்' என்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago