உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டையில் சுதந்திர தினவிழா

லாஸ்பேட்டையில் சுதந்திர தினவிழா

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். லாஸ்பேட்டை, ஜீவானந்தபுரத்தில், நாதன் அறக்கட்டளை சார்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் நேற்று காலை நடந்தது. விழாவில் பொறுப்பாளர் ஜெகதீசன் வரவேற்றார். இதில், தேசியக்கொடி ஏற்றி வைத்து, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் சிறப்புரையாற்றினார். பின் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். ஆசிர்நாத் ரமேஷ் நன்றி கூறினார். இதில் சிறப்பு அழைப்பாளர்கள், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்