உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை தாலுகா அலுவலகத்தில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல்

உழவர்கரை தாலுகா அலுவலகத்தில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல்

புதுச்சேரி: உழவர்கரைதாலுகா அலுவலகத்தில் கூடுதல் வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., அலுவலர்களை நியமிக்க வேண்டும் என, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.கவர்னர், முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் கலெக்டருக்கு, நலச் சங்க தலைவர் நாராயணசாமி அனுப்பி உள்ள மனு:உழவர்கரை தாலுகா அலுவலகத்தின் கீழ் 7 தொகுதிகள் வருகின்றன. இங்கு, 7 வி.ஏ.ஓ.,க்கள், 3 வருவாய் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க, காலதாமதம் ஆகிறது.எனவே, வருவாய்த்துறையில் பணிபுரிந்து மாற்று பணிக்கு சென்றவர்களை, சான்றிதழ்கள் வழங்கும் வரை, தற்காலிகமாக உழவர்கரை தாலுகா அலுவலகத்தில் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர்கரை தாலுகா அலுவலகத்தில் நிரந்தரமாக கூடுதல் வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., பணியிடங்களை நிரப்ப வேண்டும்.நேரடியாக சென்று கள ஆய்வு செய்யாமல், எல்லோருக்கும் உடனடியாக சாதி, குடியிருப்பு சான்றிதழ்கள் அளித்தால், அதிகப்படியான வெளி மாநில மாணவர்கள் போலியான ஆவணங்கள் கொடுத்து சான்றிதழ்கள் பெற வாய்ப்பு உள்ளது. இதனால் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பு இடங்கள் பறிபோகும். அதனால், நேர்மையாக கள ஆய்வு செய்து புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும், சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்