உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை நகராட்சியில் தீவிர துப்புரவு பணி

உழவர்கரை நகராட்சியில் தீவிர துப்புரவு பணி

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் கனரக வாகன மையத்தில் உழவர்கரை நகராட்சி சார்பில் நடந்த தீவிர துப்புரவு பணியில், 2.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.துாய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் உழவர்கரை நகராட்சி பொது இடங்களை துாய்மையாக வைத்துகொள்ள தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் கனரக வாகன மையத்தில் உழவர்கரை நகராட்சி சார்பில் தீவிர துப்புரவு பணி நடந்தது. உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் முகாமை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, மேட்டுப்பாளையம் கனரக வாகன மைய வளாகம் முழுவதும் பரவி கிடந்த 2.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் பேசும்போது, திறந்த வெளியில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.குப்பைகளை பொதுவெளியில் போடாமல் மட்கும் குப்பை,மட்காத குப்பைகள் என்று தரம்பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று பேசினார்.முகாமில் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி