உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து போலீசாருக்கு நெக் பேன் வழங்கல்

போக்குவரத்து போலீசாருக்கு நெக் பேன் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை மற்றும் கிரியேட்டிவ் மீடியா நிறுவனம் சார்பில், போலீசாருக்கு நெக் பேன் வழங்கப்பட்டது.போக்குவரத்து போலீசார் வெயிலில் நிற்பதால், அவர்களுக்கு கிரியேட்டிவ் மீடியா நிறுவனம் சார்பில், நெக் பேன் வழங்கப்பட்டது. கோரிமேடு காவலர் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், 70 போக்குவரத்து போலீசாருக்கு நெக் பேன் வழங்கப்பட்டது. சீனியர் எஸ்.பி., பிரவீன் குமார் திரிபாதி, போக்குவரத்து பிரிவு எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், நாகராஜ், சுரேஷ் பாபு, கோகுலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போக்குவரத்து போலீசார், கிரியேட்டிவ் மீடியா உரிமையாளர்கள் ராமகிருஷ்ணன், பிரபு அந்த நிறுவன ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை