உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்

கல்வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்

புதுச்சேரி: மங்கலம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி குடிசை மாற்றும் வாரியம் சார்பில், கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மங்கலம் தொகுதியைச் சேர்ந்த 36 பயனாளிகளுக்கு முதல் தவணையாக 1.20 லட்சம் வீதம், மொத்தம் 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான பணி ஆணையினை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்.நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய முதன்மை செயலாளர் சவுந்தர்ராஜன், உதவி பொறியாளர் சுதர்சனன், இளநிலை பொறியாளர் கோபிநாத், நல ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை