உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை

ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை

புதுச்சேரி: சூரமங்கலம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம், பிடித்து சாதனை படைத்துள்ளது.பள்ளி சேர்மன் மணி, பள்ளி நிர்வாகி விஜயா மணி கூறியதாவது:பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வில் மாணவி மஞ்சுளா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூனறாமிடமும், பள்ளியில் முதலிடத்தையும், மாணவி நபிலா பானு 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி அகல்யா 481 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 475க்கு மேல் 5 பேரும், 450க்கு மேல் 15 பேரும், 400 க்கு மேல் 33 பேரும் எடுத்துள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் 100க்கு 100 மதிப்பெண்கள் கணிதத்தில் 4 பேர், ஆங்கிலத்தில் 2 பேரும், 100க்கு 99 மதிப்பெண்கள் 8 பேரும், 90க்கு மேல் 18 பேர் எடுத்துள்ளனர். பள்ளி 9 ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும், 5 ஆண்டுகளாக பிளஸ் 2 பொதுத்தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சியுடன் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாணவர்களுக்கு கல்வியுடன், நீட், ஜிப்மர், ஐஐடி, ஜே.இ.இ வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர். முன்னதாக 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி