மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரியில் நடந்த ஓபன் கராத்தே போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பீமா ஓபன் கராத்தே தற்காப்பு கலை போட்டி, வில்லியனுார் லட்சுமி திருமண நிலையத்தில் நடந்தது. இதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, சாய் மற்றும் கட்டா பிரிவில் போட்டி நடந்தது. மூத்த பயிற்சியாளர் சரவணன் தலைமை தாங்கினார். சத்யா சீனிவாச ராஜூ, வெங்கடாஜலபதி, செல்வம், மொய்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார். அகில இந்திய கராத்தே சங்கத் துணைத் தலைவர் வளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை, சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். பயிற்சியாளர் சரண்ராஜ் நன்றி கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago