உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கருணாநிதி நுாற்றுாண்டு நிறைவு விழா புதுச்சேரி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கருணாநிதி நுாற்றுாண்டு நிறைவு விழா புதுச்சேரி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி தி.மு.க. சார்பில் கருணாநிதி நுாற் றுாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நுாற்றாண்டு நிறைவு விழாயொட்டி வில்லியனுாரில் மாநில அமைப்பாளர் சிவா, கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.அரியாங்குப்பத்தில் பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், கோபாலக்கிருஷ்ணன், தொகுதி செயலாளர் சீத்தாராமன் சார்பில் நிறுவப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., தலைமையிலும், பாகூரில் தி.மு.க. பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமையிலும், கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.ஏ.எப்.டி., திடலில் இருந்து பைக் ஊர்வலமாக சென்று, ஒதியஞ்சாலையில் அலங்கரித்து வைக்கப் பட்ட கருணாநிதி படத்திற்கு மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் சிவக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர் தைரியநாதன், குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, சன் குமாரவேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, ஆறுமுகம், காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன் உட்பட மலர் துாவி மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை