உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாதிரி மருத்துவமனையாக மாறும் கோரிமேடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை

மாதிரி மருத்துவமனையாக மாறும் கோரிமேடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை

கோரிமேடு இ.எஸ்.ஐ., மருத்துவமனை மாதிரி மருத்துவமனையாக 200 படுக்கையுடன் அமைய உள்ளது.புதுச்சேரியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. 1.5 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 3 லட்சம் பேர் உள்ளனர். மொத்தம், 4.5 லட்சம் பேர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பயன் பெறத் தகுதியுடையவர்களாக உள்ளனர்.இவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ வசதிகள் உள்ள புதுச்சேரி இ.எஸ்.ஐ., மருத்துவமனையை, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. குறிப்பாக, புதுச்சேரி இ.எஸ்.ஐ., மருத்துவமனையை மாதிரி மருத்துவமனைமனையாக உருவெடுக்க உள்ளது. இதற்காக இ.எஸ்.ஐ., கார்பரேஷன் புதுச்சேரி அரசினை அணுகி உள்ளது.புதுச்சேரி இ.எஸ்.ஐ.,மருத்துவமனையை பொருத்தவரை கோப்பு உள்ளிட்ட நிர்வாக விஷயங்கள் அனைத்தும் புதுச்சேரி அரசே கவனித்து வருகிறது. மாதிரி மருத்துவமனையாக மாற்றும்போது, கோப்பு உள்ளிட்ட விஷயங்கள் இ.எஸ்.ஐ., நிர்வாகத்திடமே மீண்டும் செல்லும். அதே வேளையில், தொழிலாளர்களுக்கு உயர்தர சிகிச்சைகள் கிடைக்கும். புதிய சிகிச்சை பிரிவுகளும் துவக்கப்பட உள்ளது. மேலும் தற்போதுள்ள 75 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை 200 படுக்கைகளுடன் அதிகரிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை